திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடித்மரத்தில் சிவாச்சாரியர் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடித்மரத்தில் சிவாச்சாரியர் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார். பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக வரும், 19-ல், கோவில் பின்புறம் உள்ள அருணாசலேஸ்வரர் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். வழக்கமாக விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி மாட வீதி உலா நடைபெறும். இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில், ஐந்தா-ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெற உள்ளது.
சுவாமி உலாவின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணி மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழாவின் போது பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருக்கல்யாண மண்டபத்தில், பல்வேறு வண்ண வண்ண துணிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. மேலும், 20 கி.மீ., துாரம் தெரியும் வரை, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று விழா இனிதே நடக்க வேண்டி விநாயகர் உற்வம் நடந்தது.