மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவ.19ல் லட்சதீபம்
ADDED :1462 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நவ.,14 முதல் 23 வரை நடக்கிறது. இந்நாட்களில் அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை, மாலை ஆடி வீதியில் வீதி உலா வருவர். நவ.,19ல் கோயிலில் லட்சதீபம் ஏற்றப்படும். அன்றிரவு 7:00 மணிக்கு அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றப்படும்.