திருத்தளிநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்
ADDED :1465 days ago
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கொரோனா கட்டுப்பாடு விதிகளால் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சூரசம்ஹாரம் நேற்று நடைபெறவில்லை. தினசரி மாலை 6:30 மணிக்கு மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மட்டும் நடந்தது. விழாவில் உற்ஸவர் எழுந்தருளல் இல்லாததால் சம்பிரதாயமாக மூலவருக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெறும். மூலவர் சன்னதியில் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.