திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1467 days ago
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி மற்றும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நவ.4 ல் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சுவாமிக்கு கலச பூஜை, அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெறும் . திருவிழா நடைபெறும் பத்து நாட்களிலும் தினமும் இரவு 8:00 மணிக்கு பழனியாண்டவர் சுவாமி கோயில் வளாகத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். நேற்று முன்தினம் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.