உலக முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1535 days ago
புதுச்சேரி, உலக முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.புதுச்சேரி பாரதி வீதி -தம்பு நாயக்கர் வீதி சந்திப்பில் உலக முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னதியில் நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.