உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் வசதி புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் வசதி புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வாகன நிறுத்தும் இடம், சிற்றுண்டி கடை அமைத்து தர புதுச்சேரி அரசு சார்பில் கேரள அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கேரள மாநில அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காணொலியில் கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற புதுச்சேரி அமைச்சர் லட்சுநாராயணன், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.புதுச்சேரி பக்தர்களின் வாகனங்களை நிலக்கல் பகுதியில் நிறுத்துவதற்கு இடம், புதுச்சேரி அரசு சார்பில் தற்காலிக சிற்றுண்டி கடை அனுமதிக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கட்டுப்பாட்டு அறை அமைத்து அறிவிப்புகளை செய்தற்கு தமிழ் தெரிந்த தகவல் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தனி பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரிக்கை வைத்தார். இதற்கு கேரள அமைச்சர் உடன் ஒப்புதல் அளித்தார்.புதுச்சேரியில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டதால், ஆர்.டி.,- பி.சி.ஆர்., பரிசோதனையை கட்டாயமாக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !