சிவன்மலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
காங்கேயம்:சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் தெய்வானை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிகழ்சிகள் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, காப்பு கட்டி விரத்ததை துவக்கினர். தினசரி காலையில் அபிஷேக ஆராதனையும் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் திருவுலாக்காட்சி நடைபெற்றது. இதில் சஷ்டி விரம் கடைபிடித்தகர்கள், தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா தொடர்பான, அனைத்து உற்சவ நிகழ்வுகளும் திருக்கோவிலுக்குள் நடைபெற்றது. இதில் திருக்கல்யாண உற்சவ நிகழ்வில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் முல்லை மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.