உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

விருதுநகர் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

 விருதுநகர் : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடந்தேறியது.

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நவ. 4ல் துவங்கிய நிலையில், முருக பக்தர்கள் காப்பு கட்டி விதரம் மேற்கொண்டனர். ஆறாம் நாளான நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் காலை 8:45 மணிக்கு யாக சாலை, வேல் பூஜை, சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:35 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதமாக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

*ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளை ரகு பட்டர் செய்தார். மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரபத்மனை முருகன் வதம் செய்தார். பழனியாண்டவர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.சுந்தரபாண்டியம் சாலியர் தெற்கு மேலத்தெரு, தெற்கு நடுத்தெரு சக்திவேல் முருகன் கோயிலில் மங்களவாத்தியத்துடன் புஷ்ப சப்பரத்தில் உற்ஸவர் வீதி உலா நடந்தது.

* ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோயிலுக்கு முன் சூரசம்ஹாரம் நடந்தது. சூரபத்மனை முருகன் வதம் செய்தார். சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலை சேர்ந்த குமரன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.

* சாத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாலை 5:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.சாத்துார் காசி விஸ்வநாதர் கோயிலில் மாலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரை நடந்தது. சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி, சிவன் கோயில், திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது. இது போல் மாவட்டத்தில் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !