உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

கருமத்தம்பட்டி: சூலூர் சுற்றுவட்டார முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த, 5 ம்தேதி துவங்கியது. முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹார விழா நடந்தது.

கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் நேற்று காலை, 9:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மயில்வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல், சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலிலும் கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !