உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சூலூர்: செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. சூலூர் அடுத்த செங்கத்துறையில், பழமையான விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் முடிவுற்று நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை புனித நீர் எடுத்து வந்து முதல் கால ஹோம பூஜைகள் நடந்தன. இரு கால பூஜைகள் நேற்று நடந்தன. இன்று நான்காம் கால பூஜை முடிந்து காலை 8:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !