சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில் குரு பெயர்ச்சி பூஜை
ADDED :1429 days ago
சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டியில் நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு விசேஷ யாகசாலை பூஜைகளுடன், திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி விலக்கு பிச்சை சித்தர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.