உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்த சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

சித்தானந்த சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

 புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் நேற்று மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனையொட்டி, புதுச்சேரி, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை 11:00 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடைபெற்றது. குரு பகவானுக்கு பக்தர்கள் வழங்கிய பால், தயிர், நெய், பழங்கள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. குருப்பெயர்ச்சி நேரமான மாலை 6:21 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம், அபிேஷகம் மற்றும் தீபாராதனையை ஏராளமான பக்தர்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், கோவில் குருக்கள் தேவசேனாதிபதி, சேது, சீனு மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !