சதுரகிரியில் வழிபாடு; பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED :1428 days ago
வத்ராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் கடந்த ஐப்பசி மாதம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாதம்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் நாளை நவம்பர் 16 பிரதோஷம் மற்றும் நவம்பர் 18 கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், வனப்பகுதியில் பெய்யும் மழையின் தன்மையை பொருத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.