குன்றத்து ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்த வசதி
ADDED :1428 days ago
திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இரு முடி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகி கைலாச நாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கொரோனா தடையுத்தரவால் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வயதானவர்கள், ஐயப்பன் கோயிலுக்கு கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் இருமுடி கட்டி திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தலாம். நவ., 17 முதல் பக்தர்களுக்காக சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 23085 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.