உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சீசன் துவக்கம் : கம்பமெட்டில் கேரள போக்குவரத்து சோதனை சாவடி ஏற்பாடு

சபரிமலை சீசன் துவக்கம் : கம்பமெட்டில் கேரள போக்குவரத்து சோதனை சாவடி ஏற்பாடு

கம்பம்:  சபரிமலை சீசன் துவங்குகிறது கம்பமெட்டில் கேரள போக்குவரத்துத் துறை சார்பில் வாகனங்களின் பெர்மிட்டுகளை சரிபார்க்க சோதனைச்சாவடி ஒன்றை அமைத்துள்ளனர் தமிழக அரசும் கம்பமெட்டில் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி ஒன்றை அமைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு திருவிழாவிற்காக இன்று நடை திறக்கப்படுகிறது தமிழகத்தில் பெரும்பாலும் கார்த்திகை முதல் தேதி துளசி மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லைஇந்த ஆண்டு 2 டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தவர்கள் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தமிழகம் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் குமுளி மற்றும் கம்பம்படு வழியாக சபரிமலைக்கு செல்லும். பெரும்பாலான வாகனங்கள் அந்தந்த மாநிலங்களில் உரிய பெர்மிட் பெற்று வருவார்கள். அவ்வாறு வரும் வாகனங்கள் பெற்றுள்ள பெரமிட்டுகளை சரிபார்த்து அனுப்ப கேரள வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் கம்பமெட்டில் சோதனைச்சாவடி ஒன்றை அமைத்துள்ளனர்

இதேபோன்ற வாகன சோதனை சாவடி ஒன்றை தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கம்பமெட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் பெர்மிட் வாங்காமல் தவறுதலாக வரும் வாகனங்களும் இந்த தற்காலிக சோதனைச்சாவடியில் பெர்மிட் பெற்றுக்கொண்டு செல்ல எளிதாக இருக்கும் என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !