உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்கடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

கற்கடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள கற்கடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

பழமையான இக்கோயில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து நவ. 14 ல் மங்கல இசை, திருமுறை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியதை தொடர்ந்து கோ பூஜை நடத்தப்பட்டது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:10 மணிக்கு பூரணை, புஷ்கலை உடனான கற்கடை அய்யனாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெரியகருப்பர், சின்ன கருப்பர், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் யாகம், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !