உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. இக்கோவிலில் ஸ்ரீ கால பைரவர், பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் அமைத்து ஸ்ரீ ஜலக்கண் மாரியம்மன் கோவில் முன்பு கருட கம்பம் அமைத்தும், கன்னிமூல கணபதிக்காக அமைத்த மேற்கூரையில் கலசம் வைத்தும், மேற்கண்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணிக்கு வாஸ்து பூஜைகள் தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, நிறைவு வழிபாடு, சுவாமிகள் பிரதிஷ்டை நடந்தன. தொடர்ந்து, 15ம் தேதி திங்கட்கிழமை, காலை, 5:00 மணிக்கு முறையான வழிபாடுகள், அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் பெருமாளுக்கும், காலபைரவர் களுக்கும், கன்னிமூல கணபதி, தீப கம்பம், கூரை கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு மகா அபிஷேகமும், 9:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் சின்னசாமி தலைமையில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !