சிவகாசி சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சிவகாசி: சிவகாசி ரிசர்வ்லைன் முத்துராமலிங்கபுரம் நகர் சந்தனமாரியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் லட்சுமிநாரயணன் தலைமை வகித்தார். செயலாளர் பிரவின் முன்னிலை வகித்தார் . அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை என பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து கோயிலின் கோபுரத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனா். பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கும், பின்னா் மூலவா் சிலைகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, பலராம், தெய்வம், சுப்பிரமணி, நகர செயலாளார் பொன்சக்திவேல், கலந்து கொண்டனர். மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.