இருமுடி கட்டும் காரணம்
ADDED :1455 days ago
சபரிமலை யாத்திரை புறப்படும் முன், இருமுடி நிகழ்ச்சி நடத்துவர். ஐயப்பனின் அபிஷேகத்திற்குரிய நெய்த்தேங்காய், பூஜை பொருட்கள், கடுத்தசுவாமிக்கு அவல், பொரி ஆகியவற்றை ஒரு முடியிலும், பயணம் செய்பவருக்குரிய பொருட்களை இன்னொரு முடியிலும் கட்டிக் கொள்வர். பூஜை பொருட்கள் இருக்கும் பகுதியை முன்பக்கமாக வைத்து, சுமந்து செல்வர். குரு சுவாமி அல்லது கோவில் அர்ச்சகரைக் கொண்டு இருமுடி கட்டுவது மரபு. கிழக்கு நோக்கி நின்று தலையில் வைத்துக் கொண்டு, ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டு புறப்பட வேண்டும்.