தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் லட்ச தீப உற்சவம்
ADDED :1451 days ago
தர்மஸ்தலா : கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது. தட்சிண கன்னடா தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப உற்சவம் நடப்பது வழக்கம்.இம்முறை நவம்பர் 29 முதல், டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.ஆறு நாட்களும் நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் இரவு 9:00 மணிக்கு உற்சவம் நடக்கும். டிசம்பர் 2 மற்றும் 3ல் சர்வதர்ம இலக்கிய மாநாடு நடக்கும். கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பார்.