உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை:மானாமதுரை அருகே 2,000 ஆண்டுகள் முந்தைய முதுமக்கள் தாழியை கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வேலுாரில் பழமையான முதுமக்கள்  தாழிகள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன் தொல்லியல் துறைக்கு தகவல் அளித்தார்.

ஆய்வு: அதன்படி, அருப்புக்கோட்டை பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர், அழகப்பா பல்கலை ஆய்வு மாணவர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், பறையன்குளம் அரசு  உயர்நிலை பள்ளி மாணவன் தருனேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 2,000 ஆண்டுகள் முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீதர் கூறியதாவது: வேலுார் கிராமத்தில் உள்ள திடல் அதையொட்டிய உப்பாறு ஆற்றங்கரையில் மூதாதையரின் வரலாற்று நினைவு கூறும் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் பரவி  கிடக்கின்றன. குறிப்பாக உப்பாற்றங்கரையில் முதுமக்கள் தாழி அதிக அளவில் உள்ளது. மழையின் காரணமாக வெளியில் தெரிந்த தாழிகளை ஆய்வு செய்த போது அதன் உள்ளே இரண்டு சிறிய கறுப்பு  நிற பானைகள் இருந்தன. வரலாற்று தகவல்கள்அத்துடன் ஒரு மண் தட்டும் இருந்தது. இந்த தட்டின் வாய் பகுதி அரை இஞ்ச் தடிமனாக, தாழிகளின் வாய்ப் பகுதி ஒரு இஞ்ச், முக்கால், அரை, கால் இஞ்ச்  தடிமன்களில் இருந்தது. ஓடுகளின் மேற்புறத்தில் விதவிதமான அழகிய வேலைப்பாடுகள் உள்ளன. தாழிகள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இங்கு விரிவான  ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !