உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மகா கணபதி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.

மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரம் ஆசிரியர் காலனி, ரங்கராஜ் லே-அவுட்டில், ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இங்கு புதிதாக கொடிமரம், பிரகல் நாயகி சமேத பிரகதீஸ்வரர்  உற்சவர், பூமி நாயகி சமேத வரதராஜர் உற்சவர் ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதிதாக கட்டிய சன்னதிகளுக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. யாகசாலையில் இருந்து, தீர்த்த கூடங்களை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்பு காலை, 8:30 லிருந்து, 9:30 மணிக்குள், அனைத்து  தெய்வங்களுக்கும், கொடிமரம் மற்றும் கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.‌ கோவில் அர்ச்சகர் லட்சுமி நாராயணன் தலைமையில், கணேஷ், செங்கோட்டுவேல், கண்ணன் ஆகிய  சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை செய்து, கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவ்விழாவில் குழு தலைவர் சிதம்பரம், கௌரவத் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜீவானந்தம்  உட்பட நிர்வாக குழுவினர், பொதுமக்கள் பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !