உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி : மேல்களவாய் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகா சமேத

அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு 19ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். 20ம் தேதி காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் சாமிகள் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !