உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரத்தில் இரு முடி காணிக்கை செலுத்திய ஐயப்ப பக்தர்கள்

ரெகுநாதபுரத்தில் இரு முடி காணிக்கை செலுத்திய ஐயப்ப பக்தர்கள்

ரெகுநாதபுரம்: திருவண்ணாமலை அருகே பெரியவேலிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 20 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் செலுத்தக்கூடிய நெய் அபிஷேகத்தை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.

ஐயப்ப குருசாமி பெருமாள் கூறியதாவது; கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக நாங்கள் இவ்வாண்டு சபரிமலை செல்வதற்கு பதிலாக, வல்லபை ஐயப்பன் கோயிலில் வந்து இருமுடி காணிக்கை செலுத்தி செலுத்திவிட்டு ஊர் திரும்ப உள்ளோம் என்றார். ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மூலவர் ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !