சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பவுர்ணமி வழிபாடு
ADDED :1460 days ago
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடந்தது. வள்ளலார் தெய்வீகம் தலைமை வகித்தார். அர்த்தநாரீஸ்வரர் பூஜை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலகரி, வள்ளலார் அருளிய சவுந்திரமாலை, தேவார பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. பூஜைகளை நிர்வாகி ஜோதி ராமநாதன் நடத்தினார். ஜனனி ரத்னேஸ்வரி ஜோதி வழிபாடு ஆராதனை செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில், நேற்றுடன் நிறைவு பெற்றது தெப்பல் உற்சவம், கோவில் பிரம்ம தீர்த்தகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி வள்ளி தெய்வானையுடன் முருகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏளாமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.