மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
ADDED :1460 days ago
தேவகோட்டை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு எல்லா கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெறும். தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முதல் திங்களை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.