வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1748 days ago
சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது. மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பு அபிஷேக ஆராதனையை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அறங்காவலர் கோபிநாத் சங்கடஹர சதுர்த்தி பூஜைகளை செய்தார்.