பொள்ளாச்சி கோவில்களில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1459 days ago
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பவுர்ணமிக்கு பிறகு வரும், சதுர்த்தி திதியே விநாயகருக்கு உகந்த , சங்கடஹர சதுர்த்திதினமாக கொண்டாடப்படுகிறது. வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் கடை ப்பிடிக்கப்படுகிறது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடை பெற்றன. பின், சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.