உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் கோலாகலம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் கோலாகலம்

புட்டபர்த்தி : ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 96வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. ஸ்ரீ சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், ஸ்ரீ சத்யசாய்பாபா மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவரிடம் ஆசி பெறவும் சாய் சன்னதியில் ஒன்று கூடினர்.கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரம்பரிய ரத்தோத்ஸவம் திருவிழா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சத்தியநாராயண பூஜை ஆகியவை பிரசாந்தி நிலையத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !