உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப, முருக பக்தர்கள் வருகையால் பழநியில் குவிந்த வெளிமாநிலத்தவர்

ஐயப்ப, முருக பக்தர்கள் வருகையால் பழநியில் குவிந்த வெளிமாநிலத்தவர்

பழநி: பழநி பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள வடமாநிலத்தவர் விவரங்களை சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன், முருக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிறமாவட்ட மற்றும் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரம் செய்ய வட மாநிலத்தினர் வருகையும் அதிகரித்துள்ளது. இவர்கள் பழநி அருகே சிவகிரிப்பட்டி பைபாஸ் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இவர்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள பழநி அடிவாரம் பகுதியில் பொம்மைகளை விற்கின்றனர்.இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. தடுப்பூசி செலுத்தினரா என்பதும் தெரியவில்லை. மூன்றாம் அலையை எதிர்நோக்கும் இக்காலகட்டத்தில், பழநி பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரங்களை சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு உடனே கட்டாயமாக செலுத்த வேண்டும். போலீசார் இவர்களின் விவரங்கள், அடையாளங்களை சேகரித்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !