ஸ்ரீபால் சுவாமிகள் மட ஆலயத்தில் குருபூஜை விழா
ADDED :1776 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் 1வது வார்டில் உள்ள அருளாளர் சந்ததம் ஸ்ரீபால் சுவாமிகள் மட ஆலயத்தில் சித்தர் ஜீவ சமாதி அடைந்த 104வது குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை சிவ லிங்கம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வண்ண மலர்களால் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கொண்டல்சாமி நாயுடு, வாரிசுதாரர்கள் செய்தனர்.