ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது
ADDED :1420 days ago
புதுச்சேரி: பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி, பாரதிபுரத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை நேரு எம்.எல்.ஏ., முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து தினசரி காலை மகா கணபதி ஹோமம், 25 கலசாபிஷேகம், அஷ்ட அபிஷேகம், சந்தன அபிஷேகம், மாலை சிறப்பு புஷ்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.வரும் 2ம் தேதி மாலை சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளி மறுநாள் காலை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமிக்கு தீர்த்தவாரியும், மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நடக்கிறது.மறுநாள் 29ம் தேதி காலை ஐயப்ப சாமிக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகமும், மாலை புஷ்பாபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.