சிருங்கேரி சங்கராச்சாரியார் வியாச பூஜையுடன் விரதம்!
ADDED :4844 days ago
சென்னை: சிருங்கேரி சங்கராச்சாரியார், வியாச பூஜையுடன், நேற்று தனது சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவக்கினார். கடந்த பிப்ரவரி மாதம், சிருங்கேரியில் இருந்து, தமிழகத்திற்கு, யாத்திரையாக வந்த சங்கராச்சாரியார், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, "சுதர்மா என்ற இடத்தில் தங்கி, சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கிறார். இதனை முன்னிட்டு, நேற்று முறைப்படி, வியாச பூஜை நடத்தினார். இதில், கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், ஆசார்ய பஞ்சகம் என்ற முறையில் குரு பரம்பரையை வழிபட்டார். தொடர்ந்து, சிருங்கேரி குரு பரம்பரைக்கான வழிபாடு நடந்தது. இதையடுத்து, சங்கராச்சாரியார், சாதுர்மாஸ்ய விரதத்திற்கான சங்கல்பத்தை செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.