கோட்டை மாரியம்மன் கோவில்ஆடி திருவிழா 24ல் துவக்கம்!
ADDED :4844 days ago
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, வரும் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. சேலம் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வரும் 24ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கிறது. வரும் 24ம் தேதி பூச்சாட்டுதலும், 31ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆகஸ்ட் 2ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 6ம் தேதி சக்தி அழைப்பு, 7ம் தேதி சக்தி கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10ம் தேதி பொங்கல் விழாவும், உருளுதண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆகஸ்ட் 11ம் தேதி அதிகாலை, கம்பம் நதியில் சேர்த்தல் நிகழ்ச்சியும், 12ம் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும், 13ம் தேதி வசந்த உற்சவமும் நடக்கிறது. 14ம் தேதி பால் குட விழா மற்றும் அபிஷேகம் நடக்கிறது.