உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்சித்தாமூர் பர்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்தனர்

மேல்சித்தாமூர் பர்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்தனர்

செஞ்சி; மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.


செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமையிடமான ஜின கஞ்சிமடம் உள்ளது. இங்குள்ள பார்சுவநாதர் கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாள் பெருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7-ம் நாள் விழாவாக நேற்று மகாவீர் ஜெயந்தி மற்றும் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு பகவான் 1008 பார்சுவநாதரை தேரில் ஏற்றி, மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வடம் பிடித்தல் துவங்கியது. மாடவீதிகள் வழியாக நடந்த தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க., சண்முகம் எம்.பி., தி.மு.க., மஸ்தான் எம்.எல்.ஏ., மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர். மடத்தின் சார்பிலும், ஜெயினர்களின் வீடுகளிலும், ஜெயினர் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், மோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !