வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :19 hours ago
தேனி: அல்லிநகரம் உள்ள வீரப்ப அய்யனார் கோயில், சோலைமலை அய்யனார் கோயில்களில் சித்திரை திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழா ஏப்ரல் 14ந் தேதி நடக்கிறது. இதற்காக கொடியேற்றம் விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சுவாமி அல்லிநகரத்தில் உள்ள கோயிலில் இருந்து புஷ்ப அலங்கார வாகனத்தில் புறப்பட்டு மலை அடிவார கோயிலுக்கு சென்றடைந்தார். தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.