கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1521 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதற்காக 1008 சங்குகள் மற்றும் பூக்களை கொண்டு பிரம்மாண்ட சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு இளநீர், சந்தனம்,ஜவ்வாது,மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் நத்தம், கோவில்பட்டி, சிறுகுடி, வத்திப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.