உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபம் நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபம் நிறைவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 19ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த நிலையில், நேற்றுடன் மஹா தீபம் விழா நிறைவு பெற்றது.

கடந்த 11 நாட்களாக லட்சக்கணக்கானோர், திருவண்ணாமலை வந்து மஹா தீப தரிசனம் செய்து கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை வழிபட்டு சென்றனர்.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை, 10:00 மணிக்கு நின்றது. அதன்பின் வெயில் அடித்தது. இதனால், பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.விரைவு தரிசனம் செய்ய, 20 ரூபாய் தரிசன டிக்கெட் நிறுத்தம் செய்யப்பட்டு, 50 ரூபாய் கட்டண டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !