மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சோம வார 1008 சங்காபிஷேகம்
ADDED :1609 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சோம வாரத்தை முன்னிட்டு உலக நன்மைகாக 1008 சங்கபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைகாக நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.