அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :1407 days ago
சங்கராபுரம் : அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.சங்கராபுரம் வட்டம் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் தேவராஜன், ஹர ஹர சிவம் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் ருத்ர ஜப வேள்வி பூஜையும் தொடர்ந்து சாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.