உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான சம்பவங்கள்: உடுப்பி பெஜாவர் மடாதிபதி

ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான சம்பவங்கள்: உடுப்பி பெஜாவர் மடாதிபதி

பாகல்கோட்:நாட்டில், ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான சம்பவங்கள் நடக்கின்றன. ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையே இதற்கு காரணம், என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் கவலை வெளிப்படுத்தினார். பாகல்கோட்டில் அவர் கூறியதாவது:மத்திய, மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடக்கும் போதே ஹிந்துக்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது. முடிந்த அளவுக்கு ஹிந்து விரோத செயல்களுக்கு கடிவாளம் போட வேண்டும்.அதற்காக மக்களின் எதிர்ப்பை நேரடியாக, சட்டத்தின் மூலம் தடுக்க கூடாது. நாட்டில் ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான சம்பவங்கள் நடக்கிறது. ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையே இதற்கு காரணம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !