உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில் தெப்பத்திற்கு நீர்வழிப்பாதை கண்டறியப்படுமா

பெருமாள் கோவில் தெப்பத்திற்கு நீர்வழிப்பாதை கண்டறியப்படுமா

கொடைரோடு: அம்மையநாயக்கனூர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிக்க நீர் வழிப்பாதையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் 500 ஆண்டு பழமையானது. கோயில் முன்பாக சுமார் 5 ஏக்கர் அளவிலான தெப்பக்குளம் உள்ளது. குளத்தில் நீர் நிரம்பி தெப்பத் திருவிழா நடந்து வந்ததாக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் தெப்பக்குளத்திற்கு நீர்வழிப் பாதை அடைபட்டு போனது. தெப்பக்குளமும் தூர்ந்து, புதர் மண்டிக்கிடந்தது. அவ்வப்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதர்கள் அகற்றப்படும். அதேபோன்று கடந்த வாரம் தெப்பத்தில் மண்டிக்கிடந்த புதர் பேரூராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை கீழுள்ள இத்தெப்பத்தை முறையாக பராமரித்து நீர் வழிப்பாதையை கண்டறிந்து மழைநீரை சேகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !