அம்பை வல்லபை விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1403 days ago
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் திருவள்ளுவர் நகர் வல்லபை விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, கோ பூஜை, ஸ்தபன கலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு ஹோமம், சங்காபிஷேகம், விமான கலசத்திற்கும், மூலவருக்கும் புனித நீர் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலையில், வல்லபை விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவில், உற்சவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், வீதி உலா நடந்தது.