அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க கோரிக்கை
ADDED :1500 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க கோரி, சிவனடியார்கள் திருவாசகம், தேவாரம் பாடி சுத்தம் செய்து, வழிபட்டனர்.கருவடிகுப்பம் சுடுகாட்டில் பழமை வாய்ந்த அரிச்சந்திரன் கோவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புனரமைக்க வலியுறுத்தி, சிவனடியார்கள் நேற்று திருவாசகம், தேவாரம் பாடி வழிபட்டனர். தொடர்ந்து அரிச்சந்திரன் கோவிலை சுத்தம் செய்தனர்.பின், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து, கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலை புதுப்பித்து தர உதவ வேண்டும் என மனு அளித்தனர்.