சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
                              ADDED :1432 days ago 
                            
                          
                          
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 
சபரிமலையில் ஆண்டுதோறும் மகர விளக்கு மண்டல கால பூஜைகள் காண நிகழ்வுகள் கார்த்திகை முதல் தேதி துவங்கும்.தொடர்ந்து தை மாதம் வரை பக்தர்கள் செல்வார்கள். சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் மகரவிளக்கு மண்டல கால பூஜைகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேனி கம்பம் வழியாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு மகரவிளக்கு மண்டல கால பூஜைகள் துவங்கிபதிலிருந்து கணிசமான வாகனங்கள் கம்பம் வழியாக சபரிமலைக்குச் செல்ல துவங்கின நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கம்பம்மெட்டு மற்றும் குமுளி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றன.