உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,யில் கிறிஸ்துமஸ் கீதபவனி

ஸ்ரீவி.,யில் கிறிஸ்துமஸ் கீதபவனி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சபை மக்களின் குடும்பங்களை கிறிஸ்மஸ் தாத்தாவுடன் சென்று சந்தித்து வாழ்த்துக் கூறும் கீத பவனி நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, குருமனையில் முதல் சந்திப்பு நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் பல்வேறு பகுதிகளிலுள்ள சபை மக்களை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். ஏற்பாடுகளை சபை குரு தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். இம்மாதம் 22ஆம் தேதி வரை இந்த கீத பவனி நிகழ்ச்சி இரவு தொடங்கி அதிகாலை வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !