சபரிமலையில் இருந்து பழநி, கோவை, தென்காசிக்கு டிச.7 முதல் பஸ் இயக்கம்
ADDED :1433 days ago
சபரிமலை: பழநி, கோவை, தென்காசிக்கு டிச.7 முதல் கேரள அரசு பஸ் சர்வீஸ் தொடங்குகிறது. சபரிமலையில் மண்டல சீசனையொட்டி வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பஸ் சர்வீஸ்களை அதிகரித்து வருகிறது. டிச.7 முதல் பழநி, கோவை, தென்காசிக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக மதுரை, சென்னைக்கு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.