உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

பெரம்பலுார் : பொய்யாதநல்லுார் அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை நேற்று நடந்தது.

அரியலுார் மாவட்டம், பொய்யாதநல்லுார் கிராமத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோவில் சன்னதியில் உள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கர தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு, மிளகாய் சண்டி யாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சண்டி யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !