சங்கரராமேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
ADDED :1510 days ago
துாத்துக்குடி: துாத்துக்குடி சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. ஆங்கில மாதத்தின் முதல்வாரம் முற்றோதுதல் நிகழ்ச்சி இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. திருவனந்தல் அன்பர்கள் சபை நடத்திய முற்றோதுதல் நிகழ்ச்சி மாரியப்பன் தலைமையில் நடந்தது. பக்தர்கள் திருவாசகப்பாடல்களை காலை முதல் மதியம் வரை தொடர்ந்து பாடினர்.