ஐயப்பன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :1500 days ago
அரியாங்குப்பம்-அரியாங்குப்பம் ஐயப்பன் கோவில் மஹோற்சவ விழாவில் பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.அரியாங்குப்பம், கடலுார் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 18ம் ஆண்டு மஹோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.2ம் தேதி உற்சவ மூர்த்திக்கு ஆராதனை, 3ம் தேதி ஐயப்பன் சுவாமி புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா, 4ம் தேதி நோணாங்குப்பம் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.நேற்று முன்தினம் அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து 108 நெய் தேங்காய், பால்குடம் பக்தர்கள் எடுத்து வந்து ஐயப்பன் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தனர்.